தமிழ்நாடு

tamil nadu

நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு! - Kutty Padmini case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 7:44 PM IST

Madras High Court: நில மோசடி புகாரில், பாஜக நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
குட்டி பத்மினி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - Kutty Padmini X Page and ETV Bharat Tamil Nadu)

சென்னை: மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை குட்டி பத்மினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “நிலத்தின் உரிமை கோரி புகார்தாரர் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் தொடர்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வண்ணம் பூச முடியாது” எனக் கூறி நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:“பரோல் காலத்தில் தப்பித்தார் என்பதற்காக விடுதலை செய்ய மறுக்க முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details