தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துகளை முடக்க ஐகோர்ட் உத்தரவு! - FINANCIAL FRAUD CASE

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 5:54 PM IST

சென்னை:சென்னை மைலாப்பூரில் செயல்பட்டு வந்த "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம், நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக்கோரி தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் தலைவர் எம்.சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க:“ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்ல”.. தனியார் பள்ளியிடமிருந்து மகனின் டிசியை பெற்ற தர கலெக்டரிடம் தந்தை மனு!

அதில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்துள்ளார். அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் தங்கள் சொத்துக்களை விற்கக் கூடும் என்பதால், அவர்களின் சொத்துக்களை முடக்கக்கோரி உள்துறை செயலாளரிடம் அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் யாதவ், குணசீலன் மற்றும் மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனம் உள்ளிட்டோரின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு, காவல் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details