சென்னை:போதைப் பொருளை கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது.
ஜாஃபர் சாதிக் வழக்கு: அமலாக்கத் துறை, திஹார் சிறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்! - Jaffer Sadiq
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறை மற்றும் திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Sep 4, 2024, 8:46 PM IST
இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமலாக்கத்துறை மற்றும் திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்கள்! - அதிரடி சோதனையில் சிக்கியது என்ன?