சென்னை: லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்பவர், தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியை வழக்கில் சேர்க்க மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆட்சேபத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “அரசு ஊழியருக்கு எதிராக பொய்யாக லஞ்ச வழக்கு பதிவு செய்திருந்தால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், உண்மையில் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டால், அது கேன்சரை மீண்டும் உடலில் செலுத்துவதற்கு சமம்” எனத் தெரிவித்தார்.