தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Phonepe செயலியை மோசடியாக பயன்படுத்தும் நிறுவனத்தை முடக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

மோசடியாக போன்-பே செயலியைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படங்கள்
கோப்புப்படங்கள் (Credits - Phonepe 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: பணப்பரிவர்த்தனை செயலியை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போன்-பே நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதில், “தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சிலர் பணப் பரிவர்த்தனைகள் செய்து, தங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதால், பண மோசடி செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போன்ற நிறுவனங்களை உடனடியாக கண்டறிந்து, தொடர்ந்து மோசடி நடக்காமல் முடக்குவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மோசடி செய்யும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆரம்ப கட்டத்தில் மோசடி செய்யும் நிறுவனத்தைக் கண்டறிந்து முடக்க முடியாது. எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனத்தால் பாதிப்பு என போன்-பே நிறுவனம் இ-மெயில் மூலமாகவும் புகார் அளித்தால் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடி குறித்து சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான யூஆர்எல் கணக்கு ஐடியை மத்திய அரசுக்கு போன்-பே நிறுவனம் வழங்க வேண்டும். அந்த ஐடியின் மீது தொடர்ந்து பணப் பரிவத்தனை செய்யாத வகையில் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details