தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு! - madras high court

No caste No religion certificates: சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் பெறுவதால் சொத்து, வாரிசுரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:57 PM IST

Updated : Feb 3, 2024, 12:45 PM IST

சென்னை:திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், சாதி மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக் கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சாதி மத மற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது என தெரிவித்தார். அதே வேளையில், இது போல் சான்றிதழ்கள் வழங்கினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய சான்றிதழை வழங்கினால், சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு உத்தரவுப்படி, கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விடலாம் என்றும், அதற்கான உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில், அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வீர வசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி எப்போது முடியும்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

Last Updated : Feb 3, 2024, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details