சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்ப பணிகளுக்கு திறன் சாராத ஹேங் மேன்களை பயன்படுத்தியதில், 70 பேர் மரணமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி, பயிற்சி இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என மின்சார வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டீ. வெண்ணிலா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளில் பயிற்சி பெறாதவர்களை பயன்படுத்துவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 100 பேர் மின் விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, மின்வாரியம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றவில்லை என்றும், அதன் காரணமாக சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஹேங் மேன் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.