தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை இறந்த நிலையில் கருணை வேலை கோரிய திருமணமான பெண் - பெற்றோரின் பங்களிப்புகளை வேதனையுடன் தெரிவித்த நீதிபதி! - Women rights

Father Compassionate job: மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றிற்காக பெற்றோரை சார்ந்து திருமணமான ஒரு பெண் இருந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது, பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கடினமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

mhc-judges-says-compassionate-father-job-giving-to-married-woman-has-been-difficult-till-now
திருமணமான பெண் தந்தையின் கருணை வேலை வாங்கும் போது பெற்றோரைச் சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமானதாக உள்ளது - நீதிபதி வேதனை..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:34 PM IST

சென்னை:தந்தை மதிக்குமார் இறந்ததால், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த கனரா வங்கி உத்தரவை எதிர்த்து, மகள் பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதிலளித்த கனரா வங்கி, “திருமணமான பெண், தந்தையின் வருமானத்தை சாராதவராக இருந்தால், கருணை அடிப்படையில் பணி வழங்க முடியாது” என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, “திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என்பதன் மூலம் முதல் நிலை சவாலைக் கடந்துவிட்டாலும், தந்தையின் வருமானத்தைச் சார்ந்திருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய மற்ற சவால்கள் தொடர்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு தந்தையுடன் வாழ்வது இயல்பாகிவிடும் நிலையில், மணமான பெண் தன் பெற்றோருடன் வசிக்க முடிவெடுத்துவிட்டால், அது அசாதாரணமானதாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றிற்காக பெற்றோரைச் சார்ந்து திருமணமான ஒரு பெண் இருந்து வந்தாலும், கருணை அடிப்படையில் வேலை கேட்கும்போது, பெற்றோரை சார்ந்திருப்பதை உறுதிப்படுத்துவது கடினமான பணியாகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணமான பெண்களுக்காக பெற்றோர் செய்யும் பங்களிப்புகள் கவனிக்கப்படாமலும், கணக்கில் கொள்ளப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருப்பதாக நீதிபதி மஞ்சுளா வேதனை தெரிவித்துள்ளார். ஒருவேளை அவற்றை வெளிப்படுத்தினால், மகளின் புகுந்த வீட்டின் கண்ணியக் குறைவானதாக கருதப்படுவது பிற்போக்குத்தனமானது என சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோன்ற கலாச்சார ரீதியிலான சிக்கலான விவகாரங்களில் பிடிவாத அணுகுமுறை இல்லாமல், அனுதாப அடிப்படையிலான அணுகுமுறை அவசியம் என குறிப்பிட்ட நீதிபதி, கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய பிரியாவின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரது தகுதிக்கு ஏற்ற பணிக்கான நியமன ஆணையை 6 வாரத்தில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விதியை மீறி கப்பலூர் டோல்கேட்? - தேர்தலைப் புறக்கணிப்பதாக திருமங்கலம் தொகுதி மக்கள் போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details