சென்னை :பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், சென்னை அடுத்த தையூரில் உள்ள தனது பங்களாவை ராஜேஷ்தாஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும், காவலாளியை தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் பீலா வெங்கடேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில், ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, பீலா வெங்கடேசன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க :“ராஜராஜ சோழனின் சிலை வெளியே உள்ளது வேதனை அளிக்கிறது” - கவிஞர் வைரமுத்து!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத், தையூர் பங்களாவுக்கான மின் இணைப்பு பீலாவின் பெயரில் உள்ளதால், மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க அவருக்கு முழு உரிமை உள்ளது. நிலத்தின் ஒரு பகுதி பீலாவின் தந்தை வெங்கடேசன் பெயரில் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிய பீலா தற்போது குழந்தைகளின் பெயருக்கு நிலத்தை மாற்றியுள்ளார்.
அதனால், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட முடியாது என உத்தரவிட்டு ராஜேஷ் தாஸ் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவில் தடையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்