சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பெண் போலீசாரை அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படும் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்ட் தனக்கு முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கைதுக்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.