தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை அதிமுக கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்த மேயரின் உத்தரவு ரத்து! - madars high court

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயரின் உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 10:07 PM IST

சென்னை : கோயம்புத்தூர் மாமன்றக் கூட்டம் கடந்த செப் 13ம் தேதி மேயர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை அடுத்த மூன்று கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பிரபாகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் எந்த தவறும் செய்யாத நிலையில் விதிகளை பின்பற்றாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்த்து குரல் எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்வீர்களா? என்ன காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மாமன்றக் கூட்டத்தில் அனுமதிக்க உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தில் முறையாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் கவுன்சிலர் பிரபாகரனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details