சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2011ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், இதே புகார் தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை கடந்த 2020ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜாபர் சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு, வழக்கை ரத்து செய்வதாக முதலில் நீதிமன்ற அறையில் அறிவித்தது. பின்னர், சில விளக்கங்கள் வேண்டும் என வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் (செப்.3) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.
அப்போது, ஜாபர் சேட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், “இறுதி உத்தரவு பிறப்பித்த பின்பு மீண்டும் விசாரிக்க முடியாது. உத்தரவின் நகலில் கையெழுத்து போட்டாலும், போடாவிட்டாலும் மீண்டும் விசாரிக்க முடியாது. அப்படி விசாரிக்க வேண்டும் என்றால், இருதரப்பிற்கும் மீண்டும் விசாரிப்பதாக நோட்டீஸ் கொடுத்த பின்பே விசாரிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் உத்தரவை, மனுதாரர் உட்பட அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிருந்தனர். ரத்து செய்வதாக அறிவித்த பின்பு மீண்டும் விசாரிப்பதனால் வழக்கு தொடர்ந்தவரின் நிலை என்ன? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை என்னவாகும்? மேலும், பொறுப்பு தலைமை நீதிபதியிடம் இந்த அமர்வு விசாரிக்கக்கூடாது.