தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்ச ஒழிப்புத்துறையை சாடிய கே.கே.எஸ்.எஸ்.ஆர் தரப்பு.. சொத்துக்குவிப்பு வழக்கில் நடந்தது என்ன? - அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு

KKSSR Ramachandran Asset Case: முறையான வருமான வரி செலுத்திய வருவாயையும் சட்ட விரோதமாக சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தவறாக குறிப்பிட்டுள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 7:04 PM IST

சென்னை: கடந்த திமுக ஆட்சியின், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உள்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று (மார்ச் 7) இறுதி விசாரணை தொடங்கியது.

அப்போது, அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. சுலோச்சனா தியேட்டரை 2007 - 2008-இல் 6 இடங்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் சார்பில் மீண்டும் வாதம் தொடங்கியது. அமைச்சர் கே.என்.நேரு 2006 - 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 2 கோடியே 8 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேருவின் மகன் அருண் மூலம் கிடைத்த வருமானத்தை, நேருவின் வருமானத்துடன் சேர்த்திருப்பதை உறுதி செய்து, நேரு உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது.

அமைச்சர் வழக்கில் போதுமான ஆவணங்கள் வழங்கிய பின்னர், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் மருத்துவமனையில் இருந்தபோது 8 லட்சத்து 24 ஆயிரம் மாமனார் வேதகிரி செலவு செய்த பணத்தையும், பெட்ரோல் செலவாக 6 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சொந்த வாகனத்துக்கு பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுலோச்சனா தியேட்டர் விற்பனை மூலம் கிடைத்த 37 லட்சம் ரூபாய் பங்குதாரர்களின் தொகையும் அமைச்சர் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கிலிருந்து விடுவத்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது. என்ன காரணத்திற்காக? யாரிடம் பணம் பெறப்பட்டது என்பதை வங்கி மற்றும் வருமான வரி ஆதாரங்களுடன் குறிப்பிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என வாதங்களை நிறைவு செய்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கத்திற்காக வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 25, 26 அன்று விசாரணை நடைபெறும் எனவும்,
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அரசு விளக்கத்திற்காக மார்ச் 27ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:“மறைந்த தலைவர்கள் பற்றியே மோடி பேச்சு”.. எடப்பாடி பழனிசாமி கருத்து!

ABOUT THE AUTHOR

...view details