கோயம்புத்தூர்: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரூ.30 கோடி மதிப்பில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 என்ற புற்றுநோய் சிகிச்சைக்கான புதிதாகக் கருவியை அறிமுகப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அக்கருவியின் பயன்பாட்டைத் துவக்கி வைத்து, அக்கருவி குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அதிக பயனாளர்களை இந்த மருத்துவமனை பயனடைய செய்துள்ளனர்.
மேலும், இதுபோல அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனையும் இணைந்து செயல்படுவதால் தான் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மக்களை தேடி மருத்துவம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மருத்துவ திட்டங்கள் குறித்து வெளிநாடுகளில் எடுத்துரைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் மிகப்பெரிய சாதனையை செய்து கொண்டிருக்கிறது என அண்மையில் நியூயார்க் நகரின் பொது சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"மக்களுக்கு இலவசங்களை வழங்குவதைவிட திட்டங்களை கொண்டு வர வேண்டும்".. வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!