சென்னை:சென்னையில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1,960.50 காசுகள் ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, பிற மாநகரங்களிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளன. இதனிடையே, வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல், ரூ.918.50 ஆகவே நீடிக்கிறது.
இதேபோல, டெல்லியில் ரூ.1795-க்கும், குஜராத்தில் ரூ.1,860-க்கும், மகாராஷ்டிராவில் ரூ.1,749-க்கும், புதுச்சேரியில் ரூ.1,959-க்கும், தெலங்கானாவில் ரூ.25 அதிகரித்து ரூ.2,027-க்கும் விற்பனையாகின்றன.