திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை சாலையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கார் மீது சரக்கு லாரி ஒன்று மோதி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இதன்படி, இன்று கொடைக்கானலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் கார் ஒன்று, பண்ணைக்காடு பிரிவு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி மோதல்.. கொடைக்கானல் சாலையில் உயர்தப்பிய பயணிகள்! - Kodaikanal Lorry car accident - KODAIKANAL LORRY CAR ACCIDENT
Kodaikanal Road lorry accident: கொடைக்கானல் மலை சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
Published : May 17, 2024, 10:30 PM IST
இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி, எதிர்பாராத விதமாக கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கொடைக்கானல் மலை சாலையில் லாரி கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த தாண்டிக்குடி போலீசார் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:வேலூர் கோட்டை அகழியில் இளைஞர் சடலமாக மீட்பு.. சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லையா? - Youth Died In Vellore Fort Moat