சென்னை:மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், திரைப்பிரபலங்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி தனது தாயார் ராஜாத்தியுடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நிஅன்று வாக்களித்தனர். அப்போது வரிசையில் நின்றிரந்த கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 'இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், உணர்வுடன் வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாடு முழுவதும் 12.55 சதவிகித வாக்குகள் பதிவு! - Tamilnadu Voter Turnout