தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவி செய்யாது" - மத்திய அமைச்சர் குமாரசாமி கருத்து! - Devegowda Kumaraswamy - DEVEGOWDA KUMARASWAMY

சேலம் உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக நலிவடைந்துள்ளது. அதை புத்துயிரூட்டி வேலைவாய்ப்பைப் பெருக்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம் என மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் குமாரசாமி
மத்திய அமைச்சர் குமாரசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 3:16 PM IST

திருச்சி:108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவதும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி இன்று தனி விமான மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் குமாரசாமிக்கு அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர். தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், "ரங்கநாதரின் அருளை பெறுவதற்காக நான் இங்கு வந்தேன். தொடர்ந்து இங்கிருந்து சேலம் செல்ல உள்ளேன்.

இதையும் படிங்க:விசாகப்பட்டினம் இரும்பு ஆலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு-செயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு!

அங்கு சேலம் உருக்காலையை ஆய்வு செய்கிறேன். 1970களில் தொடங்கப்பட்ட சேலம் உருக்காலை மூலம் ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அது நலிவடைந்துள்ளது. அதை மீண்டும் புத்துயிரூட்டி வேலைவாய்ப்பைப் பெருக்குவது அதனை வளர்ச்சி அடையச் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழக அரசும் தமிழ்நாட்டை சேர்ந்த விவசாய சகோதர சகோதரிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உரிய காலத்தில் மழை பெய்யும்போது காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மழை பொழிவு குறைவாக இருக்கும்போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவி செய்யாது.

இதனால் இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது. நல்ல மழைப்பொழிவு இருக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டது தமிழ்நாட்டின் அரசியல் விவகாரம். அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை" என்று குமாரசாமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details