தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு! - Lawyers Association protest

Lawyers Association: நாடு முழுவதும் இன்று முதல் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டங்களை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புகைப்படம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 6:51 PM IST

சென்னை: திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 29) திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள், நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாகவும், இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்றப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • கேளா காதுகளாய் இருக்கும் ஒன்றிய அரசை தட்டி எழுப்பும் வகையில், வரும் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக மாவட்டங்கள் ஒன்றிணைந்து, மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
  • தற்போது அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வருகிற 6 ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து வழக்கறிஞர் கலந்து கொள்வார்கள்.
  • ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்களும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்தப்படும். இந்த கருத்தரங்கத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:பழைய குற்றவியல் சட்டங்கள் Vs புதிய குற்றவியல் சட்டங்கள்! வித்தியாசம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details