தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவின் வணிகப் பயன்பாட்டிற்கான முதல் மைக்ரோ பிராசஸரை வடிவமைத்து சென்னை ஐஐடி சாதனை! - Madras IIT created micro processor - MADRAS IIT CREATED MICRO PROCESSOR

Madras IIT created India's first micro processor: வாஷிங் மிஸ்ஸின், வாட்ச், குளிர்சாதனப் பெட்டி போன்ற வீட்டு உபயோக பொருள்களுக்குப் பயன்படுத்தும் வகையில், இந்தியாவின் வணிகப் பயன்பாட்டிற்கான முதல் மைக்ரோ பிராசஸரை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.

IIT Madras Director Kamakoti, Processor Photo
IIT Madras Director Kamakoti, Processor Photo (Credits to Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 11:01 PM IST

IIT Madras Director Kamakoti Press Meet (Video Credit to ETv Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை ஐஐடியில் இயங்கும் மைண்ட் குரோவ் (mind grow) நிறுவனம் இந்தியாவின் வணிகப் பயன்பாட்டிற்கான முதல் மைக்ரோ பிராசஸரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பாக, மைக்ரோ பிராசஸர் எல்லாம் செய்ய முடியாது என வெளிநாடுகளில் இருந்த பலர் என்னிடம் கூறினர், ஆனால், அதனைச் செய்து முடித்து ஜெயித்துக் காட்டியுள்ளோம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சென்டர் பார் ரிசர்ச் மையத்தின் மேற்பார்வையில், இயங்கி வருகிறது மைண்ட் குரோவ் நிறுவனம். இந்த நிறுவனம் முதல் முறையாக, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, சாப்ட்வேர்கள் எழுதப்பட்டு தயார் செய்யப்பட்ட செக்யூர் ஐ.ஓ.டி என்கிற 26 நானோ மீட்டர் அளவு கொண்ட மைக்ரோ பிராசஸரை வடிவமைத்து உள்ளது.

இந்த மைக்ரோ பிராசஸரை அறிமுகப்படுத்தும் விழா இன்று (மே.08) சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தலைமையில், சென்டர் பார் ரிசர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அவர்கள் கண்டுபிடித்த பிராசஸரில் உள்ள பலன்கள் குறித்த விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, “3 நாட்களுக்கு ஒரு புதிய நிறுவனம் தொடங்க வேண்டும் என்கிற நோக்கில் சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது. புதிய தொழில் முனைவோருக்கு, நாங்கள் பல உதவிகளையும், வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம்.

அதன்படி நமது மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வந்த மைண்ட் குரோவ் நிறுவனம், உள்நாட்டுத் தயாரிப்பாக மைக்ரோ பிராசஸர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஐஐடியின் திட்டமான சக்தி என்கிற திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட மைக்ரோ பிராசஸரை தயார் செய்து சாதனை படைத்துள்ளது.

உலகில் உள்ள பல பெரிய மைக்ரோ பிராசஸர் செய்யும் நிறுவனங்களில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சேர்ந்து ஒரு மைக்ரோ பிராசஸரை தயார் செய்வார்கள், ஆனால் நமது ஐஐடியில் வெறும் 10, 15 மாணவர்கள் சேர்ந்து இந்த மைக்ரோ பிராசஸரை உருவாக்கி உள்ளனர்.

இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பாக, மைக்ரோ பிராசஸர் எல்லாம் செய்ய முடியாது என வெளிநாடுகளில் இருந்த பலர் என்னிடம் கூறினர். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ம் தேதி, சக்தி பிராசசர் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. அதனை தற்போது மேலும் மேம்படுத்தி வணிக பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். தற்போது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மைக்ரோ பிராசஸர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது”, என தெரிவித்தார்.

தொடர்ந்து மைக்ரோ பிராசஸரின் தயாரிப்பாளர்களான மைண்ட் குரோவ் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், “இந்த மைக்ரோ பிராசஸரை பொறுத்தவரை, இது வாஷிங் மிஸ்ஸின், வாட்ச், குளிர்சாதனப் பெட்டி போன்ற வீட்டு உபயோக பொருள்களுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 28 நானோ மீட்டர் அளவு கொண்ட இந்த மைக்ரோ பிராசஸர் உலகிலேயே சிறந்தது இல்லை என்றாலும், இது நமது இந்தியாவில் உருவாக்கப்பட்டது”, என பெருமையுடன் கூறினார்.

மேலும் பேசுகையில், “வெளிநாட்டு பிராசஸர்களை பயன்படுத்தும் போது நமது தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோ பிராசஸர் பயன்படுத்துவதால் பாதுகாப்பு அதிகரிக்கும், டேட்டா வெளியில் கசிவது குறையும். இதன் பயன்பாடு அதிகரிக்கும் போது விலை குறையும், வணிக ரீதியில் இதனைக் கொண்டு செல்ல நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்”, என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஒரு நாள்.. சேலத்தில் இருந்து பறந்த இதயம்! - Heart Transplant

ABOUT THE AUTHOR

...view details