சென்னை: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவரது மகன் நிஷாந்த் (வயது 25). லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன்கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் நிசாந்தை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 24), அவரது தம்பி கவியரசு (வயது 22), இவர்களது நண்பர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருந்த அஜித், கவியரசு, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நிஷாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அஜித் மற்றும் நிஷாந்த்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அஜித்தை, நிஷாந்த் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் நிசாந்த் சிறைக்கு சென்று வெளியே வந்த நிலையில் இருவருக்கும் இடையே பகையானது அதிகரித்துள்ளது.