சென்னை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி உள்ளது. அவரது ஜீவ சமாதி நாளையொட்டி நடைபெறும் அன்னதானத்தில், சாப்பிட்ட பின்னர் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வழிபாடு செய்கின்றனர்.
இந்த நிகழ்வுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், இது போன்று நடந்த நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார்.
மேலும், சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவர்களுக்கு ஆன்மீக பலனைத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அது தனிப்பட்ட நபரின் ஆன்மீகத் தேர்வு என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த இந்த தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “கடந்த ஏப்.28ஆம் தேதியிட்ட W.P (MD) 7068/2015-இல் தலித் பாண்டியன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் பக்தர்களை உருட்டுவதை தடை செய்தது.
பிறர் உணவு உண்ட பின் மீதியுள்ள வாழை இலையில் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமுதாயத்திற்கும் எதிரானது. இத்தருணத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவத்திற்கு தீர்ப்பு அளித்தது.