தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்வாய், சாலை அமைக்க தனிநபர் முட்டுக்கட்டை? ராணிப்பேட்டை எஸ்பி ஆபிஸில் பரபரப்பு புகார் - Complaint at Ranipet SP Office - COMPLAINT AT RANIPET SP OFFICE

Kirambadi Panchayat in Ranipet: ராணிப்பேட்டை மாவட்டம், கீராம்பாடி ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்டவைகளை அமைக்கவிடாமல் தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுடன் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

புகார் அளித்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் புகைப்படம்
புகார் அளித்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 7:51 PM IST

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீராம்பாடி ஊராட்சியில், கிராமத்தின் வளர்ச்சிக்காக சாலை, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த விடாமல் தனிநபர் முட்டுக்கட்டை போடுவதாக அப்பகுதியினர் நீண்ட நாட்லளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சியில் மக்கள் நலப்பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவர் பொதுமக்களுடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு அடுத்த கீராம்பாடி ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தேவராஜ் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கிராமத்தின் வளர்ச்சிக்காக சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை ஒப்பந்த முறையில் ஏற்படுத்தி தரும் பணிகளை மேற்கொள்ளும் போது, அதே பகுதியில் உள்ள அமமுக ஆற்காடு கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர் என்பவர் ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இதனால் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ், தனது பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:போலீஸ் வழிப்பறி.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. சென்னையில் அடுத்தடுத்து ஷாக்! - Chennai Police Robbery

ABOUT THE AUTHOR

...view details