தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தேகத்தில் காரை துரத்திய போலீஸ்; அவசரத்தில் காரை தலைகுப்புற கவிழ்த்த கடத்தல்காரர்கள்! - KATPADI DRUG SEIZED FROM CAR

காட்பாடி அருகே குட்கா பொருட்களை கடத்திச் சென்ற காரை காவல்துறையினர் விரட்டிச் சென்ற நிலையில், கடத்தல்காரர்கள் காரை விவசாய நிலத்தில் கவிழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துகுள்ளான கடத்தலில் ஈடுப்பட்டிருந்த கார்
விபத்துகுள்ளான கடத்தலில் ஈடுப்பட்டிருந்த கார் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 4:14 PM IST

Updated : Nov 28, 2024, 4:53 PM IST

வேலூர்:காட்பாடி வழியாக காரில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் பின் தொடர்வதை அறிந்த கார் ஒன்று வேகமாகச் சென்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அதே வேகத்தில் அருகில் இருந்த விவசாய நிலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக விவசாய நிலத்தில் இறங்கி காரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர், அதில் ஏதேனும் சட்டவிரோத பொருள்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். அப்போது, காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அந்த காரில் இருந்து 460 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வேலூர், காட்பாடி வழியாக, காரில் குட்கா பொருட்கள் கடத்திச் செல்வதாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) அஸ்ரா கார்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

களத்தில் இறங்கிய அஸ்ரா கார்க்:

இந்த தகவலின் அடிப்படையில், பொன்னை காவல் ஆய்வாளர் கருணா தலைமையில், அஸ்ரா கார்க்கின் தனிப்படை காவல்துறையினர், காவல் துணை ஆய்வாளர் விக்னேஷ் இணைந்து காட்பாடி அடுத்த முத்தரசு குப்பம் அருகே, இன்று அதிகாலை முதல் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க:நெல்லையின் பிரம்மாண்ட திருமணம்! ஆர்.எஸ். முருகன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

அப்போது, அவ்வழியாக ஹூண்டாய் க்ரெட்டா கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அந்த வண்டியை நிறுத்த முயன்ற காவல்துறைக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிவேகமாக காவல் தடுப்புகளை கடந்து சென்ற அந்த காரை விடாமல் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை துரத்தியது. ஆனால், காவல்துறை தங்களைப் பின் தொடர்வதை அறிந்த ஓட்டுநர், இன்னும் வேகமாக காரை ஓட்டினார்.

பதற்றத்துடன் காவல்துறையினர் கையில் சிக்காமல் சென்றுவிட வேண்டும் என நினைத்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து சேர்க்காடு வழியாக சின்ன ராமநாதபுரம் தைலம் தோப்பு அருகே சென்றுக் கொண்டிருந்த போது சாலையில் நிலை தடுமாறியது. கடைசியாக, தாறுமாறாக ஓடி, விவசாய நிலத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

காரில் சிக்கிய சட்டவிரோதப் பொருள்:

விபத்துக்குள்ளான கார் கவிழ்ந்து நொறுங்கிய நிலையில் காருக்குள் இருந்தவர்கள், காரின் கதவைத் திறந்து காவல்துறையினர் கையில் சிக்காமல் ஓடி தப்பியுள்ளனர். எனினும், சம்பவ இடத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை, அதில் ஏதேனும் சட்டவிரோத பொருட்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர்.

இதையும் படிங்க:காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!

அந்த சோதனையில் குட்கா உள்ளிட்ட 460 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் காரில் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின் அந்த போதைக் பொருட்களையும், காரையும் மேல்ப்பாடி காவல் நிலையத்திற்கு பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், காரை ஓட்டி வந்தது யார், இங்கிருந்து எங்கே போதைப் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றனர் என்பது குறித்து காவல்துறை மேம்பட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது. அதிகாலை நேரத்தில் சினிமா பாணியில் காவல்துறையினருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த சேசிங் காட்சிகளால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 28, 2024, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details