தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த தாய் தந்தைக்கு மெழுகு சிலைகளை வைத்து வழிபாடு...காட்பாடியில் நெகிழ்ச்சி சம்பவம் - KATPADI WAX STATUE FOR PARENTS

காட்பாடியில் தாய் தந்தையனிரின் நினைவு நாளை முன்னிட்டு மெழுகு சிலை அமைத்து வழிபாடு செய்த மகன் வேலூரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மெழுகு சிலை, பெற்றோர்கள் வடிவில் உள்ள மெழுகு சிலையை வரவேற்கும் குடும்பத்தினர்
மெழுகு சிலை, பெற்றோர்கள் வடிவில் உள்ள மெழுகு சிலையை வரவேற்கும் குடும்பத்தினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 5:43 PM IST

வேலூர்:வேலூர் அருகேகாட்பாடியில் தாய், தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு மெழுகு சிலை அமைத்து மகன் வழிபாடு செய்யும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை லோகநாதன் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

பெற்றோர்களுக்கு மெழுகு சிலை வைத்த மகன் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் லோகநாதனின் மனைவி ராதாபாய் அம்மாள் கடந்த ஆண்டு லோகநாதன் மறைந்த அதேமாதம் அதே தேதியில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று அவர்கள் இருவரின் மறைவு தினத்தை முன்னிட்டு சீனிவாசன் தனது தாய் தந்தையருக்கு நன்றி கடனை செலுத்தும் விதமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தாய் ராதாபாய்க்கும் தந்தை லோகநாதனுக்கும் மெழுகு சிலைகளை வடிவமைக்க ஆர்டர் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க:வனத்துறையில் அவுட் சோர்சிங் முறையை ஏன் அரசு கைவிட வேண்டும்? வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூறுவது என்ன?

இந்த நிலையில் தயாரான மெழுகு சிலைகளை சீனிவாசன், தமது சொந்த ஊரான செங்குட்டைக்கு காரில் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாய் தந்தையின் மெழுகு சிலைகளுடன் அடுத்த ஆண்டு சிறிய கோவில் ஒன்றையும் கட்ட சீனிவாசன் திட்டமிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details