தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் மும்முனை போட்டி... கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்ற போவது யார்? - Kanyakumari Election Result 2024 - KANYAKUMARI ELECTION RESULT 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பார

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:56 PM IST

கன்னியாகுமரி:இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம், முக்கடலும் சங்கமிக்கும் இடம், சர்வதேச சுற்றுலா மையம் என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது கன்னியாகுமரி. தமிழகத்தின் பிற மாவட்ட அரசியல் சூழல்களில் இருந்து மாறுபட்டது இத்தொகுதி. காரணம் இங்கு மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகம்.

2008 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியானது கன்னியாகுமரி தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது புதிதாக உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி நாடளுமன்ற தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தேசியக் கட்சிகள் ஆதிக்கம்:தேசியக் கட்சிகள் செல்வாக்குடன் திகழும் கன்னியாகுமரி தொகுதியில் இம்முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் சிட்டிங் எம்பியான விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் நாசரேத் பாசிலியன் மற்றும் நாம் தமிழர் சார்பாக மரிய ஜெனிஃபர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 7 லட்சத்து 76 ஆயிரத்து 127 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 78 ஆயிரத்து 834 பெண் வாக்காளர்களும் 135 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸ் கை ஓங்கியது:கடந்த 2019 நாடாளுன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டார்.

இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6,27,235 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் எச்.வசந்தகுமார். இந்த நிலையில் நாடளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 28 அன்று இறந்தார்.

அதையடுத்து 2021ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார். இந்த தேர்தலில் விஜய் வசந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைவிட 1,34,374 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளும், பொன்.ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிட்டர் ஆல்வின் 59,593 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட சுபா சார்லஸ் 8,536 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

களத்தில் PM முதல் CM வரை:தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் என பலர், நாசரேத் பாசிலியனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திமுக சார்பில் மு.க ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் என தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

விஜய் வசந்த் வாக்குறுதிகள்:படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டை மேம்படுத்த பயிற்சி அகாடமிகளை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உலகத் தரமான விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும். ரப்பர், தேங்காய் போன்ற பொருட்களை மையப்படுத்தி தொழிற்சாலைகளையும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளபடும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகள்:குமரி மாவட்டத்தில் நீண்டகாலமாக முடிக்கபடாமல் இருக்கும் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும். அரசு மருத்துவமனைகள் விரிவாக்கம் செய்யப்படும், விமான நிலையம் அமைக்கப்படும். வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள நாசரேத் பாசிலியன் மற்றும் நாதக சார்பில் போட்டியிட்டுள்ள மரிய ஜெனிபர் ஆகியோரும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

மும்முனை போட்டி:கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 22 பேர் களத்தில் நின்றாலும் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய 3 கட்சிகள் இடையேதான் போட்டி நிலவுகிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இந்த தொகுதியை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளான ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, கோவை தொகுதி: மும்முனைப் போட்டியில் முந்தப் போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details