காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 2,21,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்:
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சிகள் | பெற்ற வாக்குகள் |
1 | செல்வம் | திமுக | 5,86,044 |
2 | ராஜசேகர் | அதிமுக | 3,64,571 |
3 | ஜோதி வெங்கடேசன் | பாமக | 1,64,931 |
4 | சந்தோஷ் குமார் | நா.த.க | 1,10,272 |
- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 4,06,757 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 2,56,637 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 1,12,459 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 75,716 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 1,50,120 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 04.09 PM
- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 9ஆம் சுற்று முடிவில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 328526 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 202807 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 88402 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 62372 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 125719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 02.55 PM
- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 5ஆம் சுற்று முடிவில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் 131508 வாக்குகளும் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் 82842 வாக்குகளும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் 36846 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 26889 வாக்குகளும் பெற்றுள்ளனர். காஞ்சியில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 48666 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் முன்னிலையில் உள்ளார். - 10.28 AM
2024 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் மீண்டும் களம் கண்டார். அதிமுக வேட்பாளராக ராஜசேகர், பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.