சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுடன் இனைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து அறிவிக்கபட்டிருந்தது. மேலும், மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து மக்களவை தேர்தலில் 1 தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கேட்டிருந்து. கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடித்திருந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.