தென்காசி:பட்டியலினப் பெண்ணை ஏமாற்றி மருத்துவப் படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறி அழைத்து வந்து, வீட்டு வேலை வாங்கியதுடன், கடுமையாக தாக்கிய திமுக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறியதாகக் கூறி, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், இன்று (பிப்.01) தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு, தென்காசி தெற்கு மற்றும் வடக்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.