தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1,039 சதய விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழ் மண் ஒரு தெய்வ பூமி, இந்த மண்ணில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே புண்ணியம் செய்தவர்கள்.
ஒரு நாட்டை எவன் ஒருவன் பசி, பகை, நோய் இல்லாமல் சிறப்பாக காக்கிறானோ அவன் தான் தலைசிறந்த மன்னன் என்பதை உணர்ந்தவன் ராஜராஜ சோழன். பெரிய கோவில் 1,000 ஆண்டுகளை தாண்டி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. தமிழனின் பெருமையை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு எடுத்துரைக்கும் கருவியாக இருக்கிறது.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை; பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்!