தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பூரண மதுவிலக்கே வலிமையான தமிழ்நாட்டை உருவாக்கும்" - திமுக கூட்டணி மமக தலைவர் ஜவாஹிருல்லா கருத்து - jawahirullah

வலிமையான தமிழ்நாடு உருவாக வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு தான் வழிவகுக்கும், அரசு இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகிகளுடன் மமக தலைவர் ஜவாஹிருல்லா
நிர்வாகிகளுடன் மமக தலைவர் ஜவாஹிருல்லா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 10:13 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த துளசேந்திரபுரத்தில், நிகழ்சி ஒன்றில் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய குறைகள் உள்ளதாக விவசாயிகள் முறையிட்டு உள்ளனர். இதனை தனியார் நிறுவனங்களிடையே கொடுக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'வக்பு வாரியம் திருத்த மசோதா' குறித்து நாடு முழுவதும் பாராளுமன்ற கூட்டுக்குழு பயணம் செய்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.

மமக தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனிடையே வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது நடைமுறைக்கு முரணாக உள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மதரஸாக்கள், பள்ளி வாசல்கள், தர்காக்கள் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இடிக்கப்பட்டு வருகின்றன.

தீய நோக்கத்தோடு இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி முழு வீச்சில் எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம்" என தெரிவித்தார். உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:வ.உ.சி துறைமுகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுப்பு.. HMS தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

இது சரியான ஒரு முன்னெடுப்பாக நாங்கள் கருதுகிறோம். மனிதநேய மக்கள் கட்சி மதுவுக்கு எதிராக தொடக்கம் முதல் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றோம். மது ஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதை பாஜகவினர் விமர்சனம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வலிமையான தமிழ்நாடு உருவாக வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு தான் வழிவகுக்கும், அரசு இது குறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்," தமிழ்நாட்டில் தற்போது என்கவுண்டர் என்கின்ற மோதல் சாவுகளை ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எவ்வளவு பெரிய குற்ற வழக்கில் ஈடுபட்டு இருந்தாலும் அவரை நீதிமன்றத்திற்கு முன்னாள் நிறுத்தி அவருக்கு எதிரான சாட்சிகளை நிரூபித்து உச்சபட்ச தண்டனையை வாங்கிக் கொடுப்பதுதான் கடமை. ஆனால் என்கவுண்டர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்களை ஆயுதம் வைத்திருந்தார்கள், காவலர்களைத் தாக்கினர் என தற்காப்புக்காகச் சுட்டார்கள் என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பல்வேறு துறையில் முன்னோடியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில், போலி என்கவுண்டர்கள் ஏற்கத்தக்க அல்ல இதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details