இமயமலை:இந்திய ராணுவத்தில் 1935 ஆம் ஆண்டு முதல் ‘டேர் டெவில்ஸ்’ என்ற பெயரில் தன்னார்வ மோட்டார் சைக்கிள் சாகச ராணுவ வீரர்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள். இவர்களின் சாகசங்கள் கின்னஸ் உலக சாதனைகள்(Guinness World Records) புத்தகத்திலும், ஏசியா புக் ஆஃப் ரெகார்டிலும்(Asia Book of Records) இடம்பெற்றுள்ளன.
மேலும், கடந்த குடியரசு தின விழாவில் டெல்லி ராஜ்பத்தில் நடந்த நிகழ்ச்சியில், 16 அடி ஏணியில் ஏறி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அசத்தியது நாடும் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், ‘டேர் டெவில்ஸ்’ சாகசக்காரர்களான இந்திய ராணுவத்தின் சிக்னல் பிரிவு வீரர்கள் 31 பேர், இமயமலையில் 10 ஆயிரத்து 800 அடி உயர த்ராஸ் வேலி பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்களில் பிரமிடு அமைத்து வலம் வந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இதில், திராஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மாதையன் பார்க் முதல் திரௌபதி குண்ட்வரை 5 கி.மீ. தூரத்தை 7 மோட்டார் சைக்கிள்களில் 31 பேரும் அமர்ந்து பிரமிடாக வலம் வந்தனர். இமயமலை பின்னணியில் மனித பிரமிடாக 5 கி.மீ, தூரத்துக்கு ராணுவ வீரர்கள் செய்த சாகசப்பயணம் சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.