சென்னை:தன்னுடைய சுய விளம்பரத்தின் மூலமாக யாரும் தலைவராக முடியாது. இதுபோன்ற அற்பத்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டை அடி சம்பவம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை இரவு காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது, “பிரதமராக பத்தாண்டு காலம் பொறுப்பு வகித்து நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் மன்மோகன் சிங். உலக அளவில் தலைசிறந்த பொருளாதார நிபுணராக விளங்கியதுடன் அரசியலில் நிர்ணயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மன்மோகன் சிங் நிறைவேற்றினார்” என்றார்.
இதையும் படிங்க:பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இரங்கல்!
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில் ,”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழப்பு என்பது மிகவும் கவலைக்குரியது. இடதுசாரிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தார். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர், நாடாளுமன்றத்தில் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்.
அரசியலில் முன்மாதிரி: