சென்னை:விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து திட்டம் வகுக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒத்திக்காடு ஏரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கி லோகநாதன் என்ற சட்டக்ல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த லோகநாதனுன் தந்தை தாமோதரன் அளித்த புகாரின் அடிப்படையில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்திருந்த ராசு மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு எதிராக புல்லரம்பாக்கம் போலீசார், கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராசு மற்றும் ஐயப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பலியான இளைஞர் லோகநாதனின் தந்தை தாமோதரன் நேரில் ஆஜராகி வாதிட்டார்.