தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிரை வண்ணார் சமூக மக்கள் கணக்கெடுப்பு பணி விரைவில் தொடக்கம்.. திருநெல்வேலி ஆட்சியர் தகவல்!

Census work of Putrai Vannar community people: தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 6:15 PM IST

திருநெல்வேலி: புதிரை வண்ணார் சமூக மக்கள் கணக்கெடுப்பு பணி தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையைக் கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

இந்த பணிக்கான இப்சோஸ் (IPSOS) என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் நியமித்துள்ளது. இந்த நிறுவனம், துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்கள் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.

இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்துக் கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை எடுத்துச்செல்ல ஆதரவு கேட்டுக்கொண்டனர். கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தும்.

மேலும் அவர்களிடம் நேரடியாகத் தகவல்களைப் பெற்று ஆய்வு செய்யவும், சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி ஆய்வு மூலம் மேற்கொள்ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ளத் துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் கடல் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்களைக் கடத்தினாரா? - என்சிபி அதிகாரிகள் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details