ETV Bharat / state

34 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி!

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்; மேலும் தங்கள் படித்த பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம்
முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

வேலூர்: காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் முதல் மெகா சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள்.

விழாவில் முன்னாள் மாணவர்களான சென்னை உதவி போலீஸ் கமிஷனர் ஆர்.மகேந்திரன், சிங்கப்பூர் மென்பொருள் பொறியாளர் வி. கார்த்திகேயன், மாநகராட்சி சுகாதார அலுவலர் கே. சிவக்குமார், வள்ளலார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.ஜெயந்தி பூங்கொடி, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.டி.புகழ்வேந்தன், ஆசிரியை எம்.ரேவதி ஆகியோர் பேசினர்.

குழு சங்கமாக மாறியது: சங்க இணை செயலாளர் எ.வனிதா பேசுகையில்,"1990 ஆம் ஆண்டு என்னுடன் பிளஸ் டூ படித்த மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என 2022 செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் குழு ஒன்றை நான் ஆரம்பித்தேன். அப்போது அதில் ஐந்து பேரைத்தான் இணைக்க முடிந்தது.

அதன் பிறகு நண்பர்கள் சிலர் முயற்சியால் 50 க்கும் மேற்பட்டோர் குழுவில் இணைந்தனர். குழு சங்கமாக மாறியது. பள்ளியின் தேவையை கேட்டு மாணவர்களுக்காக 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.1.30லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 34 ஆண்டுகள் பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நண்பர்களை அனைவரும் ஒருங்கிணைந்து பார்த்து பேசி மகிழ்ந்தது அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. இது பள்ளியில் மீண்டும் படிக்க வந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது" என்றார்.

வாழ்வில் மறக்க முடியாத நாள்: இதுகுறித்து முன்னாள் மாணவரும், சென்னை உதவி போலீஸ் கமிஷனருமான மகேந்திரன் கூறியதாவது,
"நண்பர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸப் குழு மூலம் முன்னாள் மாணவர் சங்கம் அமைத்தார்கள். சங்கம் மூலம் நாங்கள் படித்த பள்ளியில் மாணவர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

எங்களுடன் படித்து வறுமை நிலையில் உள்ள நண்பர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.25 ஆயிரத்தை முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் வழங்கினோம். 34 ஆண்டுகளுக்குப் பிறகு நான் என் நண்பர்களை பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நான் அதிகாரி என்பதை மறந்து நண்பர்களுடன் நண்பனாக ஐக்கியமானேன்.

காவல்துறையில் என்னுடைய அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். சங்கம் எனக்கு கொடுத்த கேடையத்தை நான் பெற்ற விருதாகவே நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களை பார்த்துப் பேசி மகிழ்ந்தது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது.

இதையும் படிங்க: அரசுக்கு கொடுத்த ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனை முறைக்கேடாக விற்பனை?.. கொந்தளிக்கும் குடியிருப்புவாசிகள்!

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு: முன்னாள் மாணவியும், ஆசிரியையுமான வத்சலாதேவி கூறியதாவது,"நான் படித்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்னுடைய தந்தை தாமோதரன் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார். அவர் ஓய்வு பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார்.

1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியில் 34 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி என்பதை விட பேரானந்தத்தை ஏற்படுத்தியது. சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தனர். அப்போது என்னுடைய தந்தை தாமோதரனுக்காக நண்பர்கள் என்னை கௌரவித்தனர். இது எனக்கு மிகுந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கியது, மாணவர்கள் கல்வி கற்க கல்வி உதவித்தொகை வழங்கியது, 34 ஆண்டுகளுக்கு பிறகு தோழிகளை பார்த்துப் பேசி மகிழ்ந்தது என மூன்றும் முக்கனி சுவை போல இருந்தது, இனித்தது. விழா முடிந்து அனைவரும் பிரியும்போது கண்ணீர் வந்து விட்டது என கண் கலங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.