சென்னை: சென்னை மாநகராட்சி 2024- 25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்த 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் சென்னை மேயர் பிரியா. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் விவரங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
- மாணவர்களுக்கு இலவச சீருடைகள்:எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா இரண்டு சீருடை வழங்க ரூபாய் 8 50 கோடி ஒதுக்கீடு.
- பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்: சென்னை மாநகராட்சியில் 25 ஐந்து பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூபாய் 7.46 கோடி ஒதுக்கீடு.
- அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா செல்ல நிதி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூபாய் 45 லட்சம் ஒதுக்கீடு
- மாணவர்களுக்கு காலணி:சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கப்படும் அதற்காக மூன்று புள்ளி 59 கோடி ஒதுக்கீடு.
- மாணவர்களுக்கு STEM பயிற்சி: திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்டெம் (STEM) பயிற்சி வழங்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு.
- மாணவர்கள் சுற்றுலா செல்ல பேருந்துகள் கொள்முதல்:சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவ மாணவியர்களை ஊக்கபடுத்தும் வகையில் அவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல குறைந்தபட்சம் 45 இருக்கைகள் கொண்ட நான்கு எண்ணிக்கையிலான பள்ளி பேருந்துகள் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யபடும்.
- UKG முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: சென்னைப் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இரண்டாம் ஆண்டு (UKG) பயின்று மழலையர் படிப்பை நிறைவு செய்யும் 5944 மாணவ /மாணவியர்களுக்கும், கற்றலைச் சிறப்பாக நிறைவு செய்தமையைப் பாராட்டியும் ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான முழு தகுதியைப் பெற்றமையை பாராட்டியும் அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் பட்டமளிப்பு விழா நடத்தி மாணவ/மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.
- மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி உயர்வு:2024-25 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தபடுகிறது.
- வார்டு மேம்பாட்டு நிதி உயர்வு:2024-25 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்திலிருந்து 45 லட்சமாக உயர்த்தபடும்.
- மாமன்ற உறுப்பினர்களுக்கு TAB:மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும் ,காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வர ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 எண்ணிக்கையிலான TAB மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபடும்.