சென்னை:வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
'ரெட் அலர்ட்' வாபஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு - CHENNAI SCHOOLS
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.
பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 16, 2024, 10:32 PM IST
இந்த நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால், இன்று (அக்.17) சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.