சென்னை:கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவில் வெப்பம் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவாகி இருந்தது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாது சூழல் ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும் சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக, சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பம் குறைவாக பதிவாகி இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் வெப்பம் அதிகளவு உணர முடிந்தது. எனவே, சில நேரங்களில் வெப்பத்தின் காரணமாக, பொதுமக்கள் வெளியில் வராமல் சாலைகள் வேறிச்சோடியும் காணப்பட்டது. அதிகளவு வெப்பம் பதிவாகுவதற்கு எல் நினோ (El-Nino) ஒரு முக்கிய காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதிக வெயிலில் இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளிலோ அலுவலகத்திலோ இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வெப்பமானது, 'இன்னும் ஆறு தினங்களுக்கு தொடரும்' எனவும் தமிழக உள் மாவட்டங்களில் 'கோடை மழை' சில இடங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. 'வெப்ப அலை' குறித்தும் கோடை மழை குறித்தும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், 'கோடை என்பது வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டம் தான், வெப்ப அலை அதிகமாக பதிவாகி இருக்கிறது. மே 6 ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்ப நிலையை பொறுத்தவரை, குறிப்பிட்ட காரணங்கள் சொல்ல முடியாது; இது அந்தந்த மாவட்டத்தின் தன்மையைப் பொறுத்து அமைகிறது.