புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் 49வது ஆண்டு கம்பன் பெருவிழா நேற்று முன்தினம் (ஜூலை 12) தொடங்கி வருகிற 21ஆம் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு நாளும் கம்பன் புகழ் பாடும் வகையில் மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கவியரங்கம், இசை அரங்கம், நற்றமிழ் முற்றம், கவிதைச்சோலை, வழக்காடு மன்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று கம்பராமாயண இசை அரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் இளமுருகு முத்து தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அவருடைய சிறப்புரையில், "திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய பக்தி காவியங்களுக்கு இசையமைத்து அவற்றை மக்களிடத்தில் எளிதில் சென்றடையச் செய்யும் வகையில் உயிர் கொடுத்த இளையராஜா, தமிழர்களின் வாழ்க்கை முறையை, நெறியை, பண்பாட்டை பறைசாற்றும் இலக்கிய காவியமான கம்பராமாயணத்திற்கும் இசை வடிவம் தர வேண்டும்.