சென்னை:நிரலாக்கம், தரவு அமைப்புகள், படிமுறைத் தீர்வு, பைத்தான் போன்றவற்றைப் பயன்படுத்தி (Programming, Data Structures and Algorithms Using Python) அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை ஐஐடி NPTEL தமிழில் மொழிபெயர்த்துள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ள பாடங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்காக 682 மொழிபெயர்ப்பாளர்கள், 51 தரக்கட்டுப்பாடு நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டு மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மொத்தம் 159 தமிழ் இ-புத்தகங்கள் NPTEL (தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் தமிழில் கற்போருக்கு கூடுதல் பாடத்தொகுதிகள் கிடைப்பதுடன், 906 மணி நேரத்திற்கு வீடியோ மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. NPTEL பாடங்கள் அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.
மாநில மொழிகளில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, தொழில்நுட்பக் கல்விக்காக ஆங்கிலத்திற்கு மாறும் மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். மேலும், NPTEL-இன் மொழி பெயர்க்கப்பட்ட பாடங்கள் பற்றிய விவரங்களை https://nptel.ac.in/translation என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இது குறித்து NPTEL மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியருமான ராஜேஷ்குமார் கூறும்போது, "ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனி உலகம் உண்டு. மொழிபெயர்க்கப்பட்ட பாடங்கள் இந்தியாவில் கல்வி கற்போருக்கு கிடைக்க என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ் புதுமையான வழிகளைப் பின்பற்றியுள்ளது.