மதுரை:மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில், காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் நுங்கு வண்டி பந்தயம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, போட்டியில் பங்கேற்க வந்த அனைவருக்கும் நுங்கை சாப்பிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயத்தில் 6 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இது குறித்து போட்டியில் பங்கேற்ற ஷெசாந்த் என்ற சிறுவன் கூறுகையில், "நம் உடலுக்கு ஏற்ற சிறப்பான உணவு நுங்கு. ஆனால், என் வயதில் உள்ள சிறுவர்கள் அதனை சாப்பிடுவதில்லை. அதேபோல், இங்கு நடத்தப்பட்ட நுங்கு வண்டி பந்தயமும் மிகச் சிறப்பாக இருந்தது" எனக் கூறினார்.
அதன் பின்னர் பேசிய ஜெயந்தி மீனா என்பவர், "இங்கு நடைபெறுகின்ற நுங்கு வண்டி பந்தயம் குறித்த தகவலை சமூக வலைத்தளம் மூலம் அறிந்தேன். உடனே எனது இரண்டு பெண் குழந்தைகளின் பெயர்களையும் பதிவு செய்தேன். நகர்ப்புற வாழ்வியல் மிகுந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளுக்கு இதுபோன்ற விளையாட்டுகள் குறித்து அறிவதற்கு வாய்ப்பு இல்லை.