சென்னை:சென்னைஎண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 5 வயது பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், பிரேம்குமார் எண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தச் சூழலில், ராஜ லட்சுமி பிரேம் குமாரின் தம்பி ரமேஷ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதை பிரேம்குமார் பலமுறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜலட்சுமி அந்த பழக்கத்தை விடாமல் பிரேம் குமாருக்கு போக்கு காட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நீடித்து வந்துள்ளது.