தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த கணவன்.. நடந்தது என்ன? - husband killed wife in chennai - HUSBAND KILLED WIFE IN CHENNAI

husband killed wife in chennai: சென்னையில் தங்கி கார்பென்டர் வேலை செய்து வரும் வட மாநிலத்தவர் தனது மனைவியை குடும்ப பிரச்சனை காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்த கணவர் புகைப்படம்
மனைவியை கொலை செய்த கணவர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 2:13 PM IST

சென்னை: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபன்கர் சர்க்கார் (30), ரூம்பா பர்மான்(33) தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்திற்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். தீபன்கர் சர்க்கார் கார்பென்டராக வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி ரூம்பா பர்மான் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் இத்தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தீபன், மீண்டும் வீட்டை வெளியே பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக அவரது மனைவியின் செருப்பை உள்ளே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரூப்மா பர்மான் பேச்சு மூச்சின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கேளம்பாக்கம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் தீபன்கர் சர்க்காரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தீபன்கர் சர்க்கார், பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீபன்கர் சர்க்காரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை கேளம்பாக்கம் காவல் நிலையம் அமைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில், ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தீபன்கர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது ஜூலை 16-ல் தீர்ப்பு! - SENTHIL BALAJI ED CASE

ABOUT THE AUTHOR

...view details