திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செல்வ நகர் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கந்திலி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுக் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த மூன்று மாத காலமாகவே மிகுந்த மன உளைச்சலில் யோகேஸ்வரன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது வீட்டில் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.