சென்னை:கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், மருத்துமனைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயில்.. கோடை காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பது எப்படி? - HOSPITAL FIRE SAFeTY - HOSPITAL FIRE SAFETY
HOSPITAL FIRE SAFETY: கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தீயணைப்பு சாதனங்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Published : Apr 2, 2024, 3:15 PM IST
|Updated : Apr 2, 2024, 4:03 PM IST
இது குறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் தீ விபத்தால் ஏற்படும் பேரழிவு சம்பவங்களைத் தடுப்பதற்கான முன்முயற்சி மேற்காெள்ள வேண்டும். அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவமனைகளிலும், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தீ பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் விரிவான தீ பாதுகாப்பு தணிக்கையை நேரடியாக நடத்த வேண்டும். தீ எச்சரிக்கை அலாரம், தீ புகை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் கருவிகள், தீயணைப்பான்கள், தீ அணைக்க ஏணிகள், லிப்ட்கள் உள்ளிட்ட தீயை அணைக்கும் அமைப்புகள் முழுமையான செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- மருத்துவமனைகள் தொடர்ந்து மின் சுமை தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, புதிய உபகரணங்களை சேர்க்கும் போது அல்லது இடைவெளிகளை ICUSஆக மாற்றும் போது அந்தப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சரியான மின்திறன் இணைப்புகளை அளிக்க வேண்டும்.
- மருத்துவமனைகள் கண்டிப்பாக மாநில தீயணைப்புத் துறைகளில் இருந்து செல்லுபடியாகும் தீ பாதுகாப்புச் சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும். மேலும், தீ பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களில் மின் சுமைகளை முன்னுரிமை அடிப்படையில் மறு அளவீடு செய்ய வேண்டும்.
- ஆக்ஸிஜன் தொட்டிகள் அல்லது குழாய் ஆக்ஸிஜன் உள்ள பகுதிகளில், புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடுவதுடன், தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதிக ஆக்ஸிஜன் சூழலுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- தீ புகை கண்டறிதல் கருவிகள் மற்றும் தீ அலாரங்கள் அனைத்து மருத்துவமனைப் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். நோயாளி அறைகள், நடைபாதைகள் மற்றும் பொதுவான பகுதிகள் IS 2189 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அமைப்புகளை மாதந்தோறும் சோதித்து, ஆண்டுதோறும் அல்லது தேவைக்கேற்ப பேட்டரிகளை மாற்ற வேண்டும்.
- தீ விபத்து ஏற்படும் போது தப்பிக்கும் வழிகள், தடைகள் இல்லாத அவசரகால வெளியேற்றங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான கூடும் பகுதிகளை உள்ளடக்கிய விரிவான வெளியேற்றத் திட்டங்களை உருவாக்குதல். மருத்துவமனை முழுவதும் மற்றும் பணியாளர் பயிற்சி திட்டங்களில் திட்டங்கள் முக்கியமாக காட்டப்பட வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா - மத்திய அரசு கண்டனம்!