சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் தேர்வாக 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களில், தமிழ் மற்றும் சிறுபான்மை மொழியில் பயின்றவர்களுக்கான மொழித்தாள் தேர்வு நடைபெற்றது.
சிறுபான்மை மாணவர்கள் தமிழ் கட்டாயம் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், நான்காயிரம் மாணவர்கள் அவர்களின் மொழியில் தேர்வினை எழுதினர். அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு 9,26,663 மாணவர்கள் பதிவு செய்தனர்.
அவர்களில், பள்ளி மாணவர்களாக 9,10,175 பேரும், தனித்தேர்வர்கள் 16,488 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மொழித் தாள் தேர்வினை 16,314 பள்ளி மாணவர்களும், 1,319 தனித் தேர்வர்கள் என 17,633 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவித்துள்ளனர்.