திருவாரூர்: திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தியாகப்பெருமா நல்லூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ஜெயா (45). இவர் புதிய பேருந்து நிலையத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக, இவரது இளைய மகன் லோகேஷ் ஹோட்டலில் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில், சத்தியபாலன் (30) என்பவர் போதையில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இந்த ஹோட்டலுக்கு இன்று மதியம் சாப்பிட வந்துள்ளார். இதனையடுத்து, சத்தியபாலனும், அவரது நண்பர்களும் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளர் ஜெயா மற்றும் அவரது மகன் லோகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயா, வெங்காயம் வெட்டும் கத்தியால் சத்தியபாலனின் கையில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பிரச்னை அதிகமாகவே, இச்சம்பவம் குறித்து ஜெயா தனது மூத்த மகன் விக்னேஷிடம் (22) கூறியுள்ளார்.