தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வீரசோழன் ஆற்றில் இருந்து கொண்டு யாகசாலை பூஜைக்காக புனிதநீரை வீரசோழன் ஆற்றில் இருந்து கொண்டு வரும் நிகழ்வானது தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், இன்று (ஜன.30) நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வு ஒட்டங்கள், குதிரைகளின் அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்று.
தமிழகத்திலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் தலமாக போற்றி வணங்கப்பெறுவது கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி கோயில். தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயில் 3ம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
இந்த கோயிலின் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் திருபுவனம் வீரசோழன் ஆற்றிலிருந்து இன்று புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.