சென்னை:சென்னை கிண்டியில் 116.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தேசிய முதியோர் நல மருத்துவமனையை' பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதியோருக்காகத் திறக்கப்பட்ட முதல் மருத்துவமனை இதுவாகும்.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இந்த மருத்துவமனையில் உள்ள அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.
தரை தளம்:உதவி மையம், முதியோர் மருத்துவம் பெண்கள், பிறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம், இரத்த வங்கி,
அவசரச் சிகிச்சைப் பிரிவு, மருந்து கிடங்கு. முதியோர் மருத்துவம் ஆண்கள், புறநோயாளிகள் பிரிவு, எலும்பியல் மருத்துவம், இசிஜி, சிறுநீரக மருத்துவப் பிரிவு. சிறுநீரக அறுவைசிகிச்சை பிரிவு, இதய மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை தரைதளத்தில் அமைந்துள்ளது.
சிகிச்சைப் பிரிவுகள்:பொது மருத்துவம், நரம்பியல், மருத்துவம்,குடல் இரைப்பை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம். பல் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை மருத்துவம். சிறு அறுவை சிகிச்சை மையம். உள்நோக்கியியல் மருத்துவம்.